தண்ணீரில் மிதக்கும் தாமரையா இவள்.‌. குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்ட திவ்யா துரைசாமி !

divya duraisamy

 நடிகை திவ்யா துரைசாமி குளியல் போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

divya duraisamy

முன்னணி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும்‌ இருந்தவர்‌ திவ்யா துரைசாமி. தற்போது தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.‌ பெரிய வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி நடித்து வருகிறார். 

divya duraisamy

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். அதன்பிறகு சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் வெளியான ‘குற்றம் குற்றமே’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதேபோன்று ‘மது’ என்ற படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.  பின்னர் சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் திவ்யாவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. 

divya duraisamy

'மாமன்னன்'  படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கியுள்ள 'வாழை' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். வித்தியாசமான கதாபாத்திரத்தில் திவ்யா நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் திவ்யா துரைசாமி, ஹோம்லி மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் சினிமாவில் வாய்ப்புகளை பெற கிளாமர் ரூட்டிற்கு மாறியுள்ளார். இதையொட்டி மாடர்ன் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் குளம் ஒன்றில் தாமரை பூ போன்று குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. 

divya duraisamy

Share this story