கிளாமர் ரூட்டிற்கு மாறிய திவ்யா துரைசாமி... மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்கள் !

Divya duraisamy

இளம் நடிகையான திவ்யா துரைசாமி கிளாமர் ரூட்டில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

Divya duraisamy

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை திவ்யா துரைசாமி. செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்த அவர், தற்போது சினிமாவில் கலக்கி வருகிறார். இவரின் நடிப்புக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். 

Divya duraisamy

அதன்பிறகு சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் வெளியான ‘குற்றம் குற்றமே’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதேபோன்று இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‘மது’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதேநேரம் சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

Divya duraisamy

தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'வாழை' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் திவ்யா துரைசாமி, ஹோம்லி மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் சினிமாவில் வாய்ப்புகளை பெற கிளாமர் ரூட்டிற்கு மாறியுள்ளார். இதையொட்டி மாடர்ன் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.  ‌ 

Share this story