காந்த கண்ணால் கவர்ந்திழுக்கும் துஷாரா விஜயன்... லேட்டஸ்ட் லுக் புகைப்படங்கள் !

DusharaVijayan

 நடிகை துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

DusharaVijayan

தனது அழகான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் துஷாரா விஜயன். இளம் நடிகையாக இருக்கும் அவர், ‘சார்பட்டா’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். சினிமாவிற்குள் வருவதற்குள் பேஷன் டிசைன், மாடலிங்கில் ஆர்வம் காட்டி வந்தார். 

DusharaVijayan

கடந்த 2019-ஆம் வெளியான ‘போதை ஏறி புத்தி மாறி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு தான் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘சார்பட்டா’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதில் அவரின் மாரியம்மா கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். 

DusharaVijayan

இந்த படத்திற்கு பிறகு வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அநீதி’ படத்தில் அர்ஜூன் தாஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.‌ இதையடுத்து மீண்டும் பா ரஞ்சித் இயக்கத்தில் 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தில் நடித்தார். இந்த படம் போதிய வரவேற்பை பெறவில்லை. இருப்பினும் தொடர்ந்து புதிய படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். 

DusharaVijayan

இந்நிலையில் மாடர்ன் பெண்ணான துஷாரா விஜயன், ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமூக வலைத்தளத்தில்  அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

DusharaVijayan

DusharaVijayan

Share this story