கட்டுக்கோப்பான உடலுடன் ஈஷா ரெப்பா.. வைரல் புகைப்படங்கள் !
1692294872957

அசத்தல் லுக்கில் நடிகை ஈஷா ரெப்பா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகை ஈஷா ரெப்பா தெலுங்கில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். தமிழில் 2016-ல் வெளியான 'ஓய்' என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்துள்ள 'ஆயிரம் ஜென்மங்கள்' என்ற படத்தில் நடித்தார். இதில் சாக்ஷி அகர்வால், நிகிஷா படேல் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை அடுத்து தமிழில் வாய்ப்புகள் வரவில்லை என்றாலும் தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஈஷா பட வாய்ப்புகளுக்காக அடிக்கடி போட்டோஷூட் நடத்துவது வழக்கம். தற்போது ஈஷா அசத்தல் லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.