ரசிகர்களின் கமெண்ட்ஸ் எதிரொலி... கவர் போட்டோவை நீக்கிய பஹத் பாசில் !

fahadh faasil

சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு கிளப்பிய நிலையில் தனது கவர் போட்டோவை நடிகர் பஹத் பாசில் நீக்கியுள்ளார். 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாமன்னன்’. இந்த படத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த ஜூன் மாதம் வெளியான இப்படம் நல்ல வசூலையும், விமர்சனங்களை பெற்று வருகிறது. 

fahadh faasil

இதையடுத்து கடந்த வாரம் இந்த படம் ஓடிடியிலும் வெளியானது. ஓடிடி டிரெண்ட்டிங்கில் முதலிடம் பிடித்த இந்த படத்தில் வில்லனாக நடித்தருந்த பஹத் பாசிலின் ரத்னவேலு கதாபாத்திரம் ஒரு தரப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அவரது பில்ட் அப் காட்சிகளை எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்கள் கொண்டாடினர். இது குறித்த மீம்ஸ் மற்றும் வீடியோக்கள் கடந்த சில நாட்களாக இணையத்தில் வேகமாக வைரலானது. 

fahadh faasil

தனது கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பால் மகிழ்ச்சியடைந்த நடிகர் பஹத் பாசில், ரத்திரவேலு கதாபாத்திரத்தின் புகைப்படங்களை தனது கவர் போட்டோவாக மாற்றினார். இதை பார்த்த மற்றொரு தரப்பு பஹத் பாசிலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கமெண்ட்டுகளை பதிவிட்டு வந்தனார். இந்நிலையில் ஒரு தரப்பு எதிர்ப்பை அடுத்து தன்னுடைய கவர் போட்டோ அதிரடியாக பஹத் பாசில் மாற்றியுள்ளார். அதற்கு பதிலாக எந்த புகைப்படத்தையும் பதிவிடாமல் காலியாக விட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. 

 


 

Share this story