பிரபல நடிகையின் தந்தை தற்கொலை
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மலைகா அரோரா. மேலும் பல்வேறு படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் ‘தைய்ய தைய்யா’ பாடலில் நடனமாடி தமிழ் ரசிகர்களிடத்திலும் பரிச்சயம் ஆகியுள்ளார்.
இந்த நிலையில் மலைகா அரோராவின் தந்தை அனில் அரோரா உயிரிழந்துள்ளார். மும்பையில் அவர் வசிக்கும் குடியிருப்பு கட்டடத்தில் 6வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது. சமீபகாலமாக அவர் உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளதாக சொல்லப்படும் நிலையில் இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த போது மலைகா அரோரா வீட்டில் இல்லை என்றும் அவர் புனேவில் இருந்ததாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.