நடிகை கயாடு லோஹர் பிறந்தநாள்... 'இதயம் முரளி' படக்குழு கேக் வெட்டி கொண்டாட்டம்...!

kayadu lohar

நடிகை கயாடு லோஹர் தனது பிறந்தநாளை 'இதயம் முரளி' படக்குழுவினர் உடன் கேக் வெட்டி கொண்டாடினார். 

 அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ படம் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, அதில் நடித்த கயாடு லோஹர் சமூக வலைதளங்களில் பெரும் சென்சேஷன் ஆகிவிட்டார். அசாம் மாநிலத்தை சேர்ந்த கயாடு லோஹர், 2021-ல் வெளியான ‘முகில்பெடெட்’ என்ற மலையாளப் படத்தில் அறிமுகம் ஆனார். பிறகு 2022-ல் வெளியான ‘அல்லுரி’ என்ற தெலுங்கு படத்தில் ஸ்ரீவிஷ்ணுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். எனினும் ‘டிராகன்’ படமே அவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக்கியுள்ளது. 



 இந்த நிலையில், நடிகை கயாடு லோஹர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா உடன்  'இதயம் முரளி' படத்தில் நடித்து வருகிறார்.  அதர்வாவுடன் இணைந்து ப்ரீத்தி முகுந்தன், நட்டி நட்ராஜ், ரக்ஷன், தமன், நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 
இன்று பிறந்தநாள் கொண்டாடும் கயாடு லோஹர்,  'இதயம் முரளி' படகக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். 

Share this story