காமெடி நடிகரை காதலிக்கிறாரா நடிகை காயத்ரி ?... இணையத்தில் பரவும் புகைப்படம் !

ஸ்டாண்ட் அப் காமெடி நடிகர் ஒருவரை நடிகை காயத்ரி காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் நடிகை காயத்ரி. தமிழில் ‘18 வயசு’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு விஜய் சேதுபதியுடன் இணைந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, சூப்பர் டீலக்ஸ், மாமனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதுதவிர சமீபத்தில் வெளியான கமலின் ‘விக்ரம்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது மலையாளத்தில் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஸ்டாண்ட் அப் காமெடி நடிகர் அரவிந்த் சா என்பவரை நடிகை காயத்ரி காதலித்து வருவதாக தகவல் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அரவிந்த் சாவுடன் அடிக்கடி டேட்டிங் செய்து வருவதாகவும், அது குறித்து புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகின. ஆனால் இது குறித்து எந்த மறுப்பையும் நடிகை காயத்ரி தரப்பில் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.