சிறந்த நடிகை விருதை தட்டி தூக்கிய காயத்ரி சங்கர் - குவியும் வாழ்த்துகள்.

விஜய் சேதுபதி- சீனுராமசாமி நான்காவது முறையாக கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற திரைப்படம் “மாமனிதன்”. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடித்திருந்தார். மேலும் ‘ஜோக்கர்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த குருசோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2019 ஆம் ஆண்டே படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் தான படம் ரிலீஸ்ஸானது. ரசிகர்களில் பேராதரவை பெற்ற இந்த படம் பல விருதுகளை வாங்கி குவித்தது.
அந்த வகையில் JIFF என அழைக்கப்படும் 15 ஆவதுஜெய்பூர் சர்வதேச திரைப்பட விருது 2023 கடந்த 6ஆம் தேதி தொடங்கி 10ஆம் தேதிவரை நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை ‘மாமனிதன்’ படத்திற்காக நடிகை” காயத்ரி சங்கர்” தட்டி தூக்கியுள்ளார். தொடர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து படத்தின் இயக்குநரான சீனுராமசாமி உட்பட பலருமே வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகை காயத்ரி சங்கர், 2013-ம் ஆண்டு நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரைத்துறையில் அறியப்பட்டார். பின்னர் பொன்மாலை பொழுது, மத்தாப்பு, ரம்மி, சூப்பர் டீலக்ஸ், விக்ரம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகையாக உருவெடுத்தார்.