குறையாத இளமை... ஜெனிலியாவின் லேட்டஸ்ட் க்ளிக் !

genelia

நடிகை ஜெனிலியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

genelia

தமிழ், தெலுங்கு, இந்தி என பிசியாக நடித்து வந்தவர் ஜெனிலியா. முன்னணி நடிகையாக இருந்த அவர், ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார்.

genelia

திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த நடிகை ஜெனிலியா, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு கணவருடன் ஒரு சில மராத்தி திரைப்படங்களில் நடித்தார். இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். 

genelia

இந்நிலையில் நடிகை ஜெனிலியா வெளியிட்டுள்ள போட்டோஷூட் ஒன்று ரசிகர்களை கவர்ந்துள்ளது. 10 வருடங்களுக்கு க்யூட் அழகில் இருந்த அதே பொலிவுடன் அந்த புகைப்படங்கள் உள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

genelia

 

 

Share this story