தென்னிந்தியா சினிமாவால் பாலிவுட் வாய்ப்பு பறிபோனது - நடிகை ஜெனிலியா வேதனை !

genelia

தென்னிந்தியாவில் நடித்ததால் பாலிவுட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்டதாக நடிகை ஜெனிலியா வேதனை தெரிவித்துள்ளார்.  ‌ 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஜெனிலியா. தனது குழந்தைத்தனமான நடிப்பால் இன்றைக்கும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளார். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு விஜய்யுடன் 'சச்சின்' வேலாயுதம், ஜெயம் ரவியுடன் சந்தோஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

genelia

தமிழை தவிர தெலுங்கு, இந்தி உள்ளிட்ட இந்தியாவின் பல மொழிகளில் நடித்துள்ளார். திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த நடிகை ஜெனிலியா, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு கணவருடன் ஒரு சில மராத்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த நடிகை ஜெனிலியா, நடிப்பின் மீது ஆர்வம் வர காரணமே தென்னிந்திய சினிமாதான். தென்னிந்திய சினிமாவால் தான் ஏராளமான ரசிகர்களின் அன்பு கிடைத்தது. நான் தென்னிந்திய சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது பாலிவுட் வாய்ப்பு வந்தது. ஆனால் இங்கு நடித்ததால் பாலிவுட் என்னை கைவிட்டதோடு அங்கு செல்ல அறிவுறுத்தினர்.  தென்னிந்திய சினிமாவில் நடிக்கும் ஆசை உள்ளது. சரியான கதையும், நல்ல கதாபாத்திரமும் வந்தால் நிச்சயம் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.  ‌ 

Share this story