‘மண்டலோ’ பட பாணி படத்தில் கவுண்டமணி.. மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் !

Gaundamani

அரசியல் கதைக்களத்தில் உருவாகும் ஒரு படத்தில் நடிகர் கவுண்டணி ஹீரோவாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாக காமெடி நடிகராக இருந்தவர் கவுண்டமணி. தனது காமெடி மூலம் ரசிகர்களிடையே மிகுந்த கவனம் பெற்றார். அதிலும் நடிகர் செந்திலுடன் இணைந்து அவர் செய்யும் காமெடி ரசிகர்கள் மறக்க முடியாதவை. இப்படி பிசியான காமெடி நடிகராக இருந்து வந்த அவர், வடிவேலு வருகைக்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டார். 

Gaundamani

பல இயக்குனர்கள் நடிக்க அழைத்தும் அவர் நடிக்க வரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘49 ஓ’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அரசியல் கதைக்களத்தில் உருவான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் அடுத்து ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ என்ற விவசாய படத்தில் நடித்திருந்தார். 

இந்நிலையில் மீண்டும் புதிய படம் ஒன்றில் நடிகர் கவுண்டமணி நடித்து வருகிறார். ‘ஒத்த ஓட்டு முத்தையா’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படம் மண்டேலா பட பாணியில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. சசி பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் ரவி ராஜன் தயாரிக்கும் இந்த படத்தை சாய் ராஜகோபால் இயக்குகிறார். சித்தார்த் விபின் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். விரைவில் இந்த படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 

Share this story