திருமணமானதால் சினிமாவில் இருந்து விலகலா ? - நடிகை ஹன்சிகா ‌‌‌‌‌‌விளக்கம் !

hansika

திருமணத்திற்கு பிறகு தனது வாழ்க்கை குறித்து பரபரப்பு தகவல் ஒன்றை நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ஹன்சிகா. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். பிசியான திரைப்படங்களில் நடித்து வந்த ஹன்சிகா, கடந்த ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி பிரபல தொழிலதிபர் சோஹைல் கதுரியாவை நடிகை ஹன்சிகா திருமணம் செய்துக்கொண்டார். ராஜஸ்தான் மாநிலம் புகழ்பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

hansika

திருமணம் முடிந்த இரண்டு மாதங்கள் கழித்து இன்று சென்னைக்கு நடிகை ஹன்சிகா வந்தார். அப்போது செய்தியாளர் கேள்விகளுக்கு உற்சாகமாக பதிலளித்தார். அதில் அனைவருக்கும் முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு குழந்தை மீண்டும் தனது தாயிடம் வந்ததது போல் உணர்கிறேன். இயக்குனர் நந்தகோபால் அவர்களின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறேன். அந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சென்னை வந்துள்ளேன். அந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது.  ‌‌‌‌‌‌இந்த ஆண்டு மட்டும் 7 படங்களில் ஒப்பந்தமாகியுள்ளேன். இந்த ஆண்டு மிகவும் அதிர்ஷ்டமான ஆண்டாக உள்ளது.‌

hansika

மேலும் திருமண வாழ்க்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், திருமண வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கிறது. மகிழ்ச்சியாக உள்ளேன். திருமண முடிந்த பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்த கேள்விக்கு, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. இன்றைய தலைமுறையில் ஆண், பெண் இருவரையும் சமமாக பார்க்கிறார்கள். இதற்கு மேல் என்ன வேண்டும். திருமணத்திற்கு பிறகு என்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரே மாற்றம் மோதிரம் மட்டும் தான்‌. திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கவிருப்பதாகவும் கூறினார். 

Share this story