உன் அழகின் ரகசியம் என்ன ?.. ஹன்சிகாவிடம் கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !
நடிகை ஹன்சிகாவின் அழகிய புகைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த நடிகையாக இருப்பவர் நடிகை ஹன்சிகா. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதுவரை 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவர், தற்போது ‘மேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வியக்க வைக்கும் அழகில் இருக்கும் புகைப்படங்களை நடிகை ஹன்சிகா வெளியிட்டுள்ளார். சூரிய ஒளி அழகில் இருக்கும் அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்திலும் வைரலாகி வருகிறது.