நடிகை ஹன்சிகாவின் பிரம்மாண்ட திருமணம்... ‘லவ் ஷாதி டிராமா’ டீசர் வெளியீடு !

hansika

நடிகை ஹன்சிகாவின் திருமண வைபவத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

hansika

பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ஹன்சிகா. தென்னிந்தியாவில் பல மொழிகளில் நடித்து வரும் அவர், கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி பிரபல தொழிலதிபர் சோஹைல் கதுரியாவை திருமணம் செய்துக்கொண்டார். ராஜஸ்தான் மாநிலம் புகழ்பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

hansika

இந்த திருமணத்தில் முக்கிய பிரபலங்கள் மட்டுமே கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த திருமணம் எப்படி நடந்தது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். அதை பூர்த்தி செய்யும் வகையில் பிரபல ஓடிடி நிறுவனமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், திருமணத்தின் முழு தொகுப்பையும் வெளியிடவுள்ளது. 

hansika

இந்நிலையில் பிரம்மாண்ட நடைபெற்ற ஹன்சிகாவின் திருமண வீடியோ, ‘லவ் ஷாதி டிராமா’ என்ற பெயரில் வரும் பிப்ரவரி 10-ஆம் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதையொட்டி இந்த திருமண வைபவத்தின் டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த டீசர்  முழு தொகுப்பை காணும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. 

 

 


 

Share this story