திருமணத்திற்கு எந்த அவசரமும் இல்லை - அஜித் பட நடிகை தடாலடி !

Huma Qureshi

தனது திருமணத்திற்கு எந்த வித அவசரமும் இல்லை என பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி தெரிவித்துள்ளார். 

விளம்பர மாடலாக இருந்த நடிகை ஹூமா குரேஷி, தற்போது பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.  அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியான ‘கெங்ஸ் ஒப்பி வசுசேய்புர’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என பல மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார். 

தற்போது இந்தியாவில் புகழ்பெற்ற நடிகையாக இருக்கும் அவர், தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘காலா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதேபோன்று அஜித் நடிப்பில் வெளியான ‘வலிமை’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தமிழில் இவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. 

Huma Qureshi

இதற்கிடையே முடாசர் அசிசை கடந்த 3 ஆண்டுகளாக ஹுமா குரோஷி காதலித்து வந்தார். சமீபத்தில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றை அவர், தான் திருமணத்திற்கு அவசரப்படவில்லை என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், நான் சரியான நபருக்காக காத்திருக்கிறேன். அதுபோன்ற நபரை சந்தித்தால், திருமணம் செய்துக்கொள்வேன். தொடர்ந்து பாலிவுட் நடிகைகள் திருமணம் செய்துக்கொள்வதால், நானும் அதை செய்வேன் என்று எதிர்பார்க்கிறார்கள். அதனால் இது குறித்து என்னிடம் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. திருமணம் தொடர்பாக எனக்கு எந்த அழுத்தமும் இல்லை என்று கூறினார். 

 

Share this story