மீண்டும் தாயாக போவதை அறிவித்த நடிகை இலியானா!
கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை இலியானா. அதன்படி இவர் தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பல்வேறு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதேசமயம் டோலிவுட் பாலிவுட்டிலும் பிஸியாக நடித்து வந்தார். ஆனால் அதை தொடர்ந்து சினிமாவை விட்டு விலகிய இலியானா, ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவருடன் லிவிங் டுகெதரில் இருந்து வந்தார். அதன் பிறகு அவர் தன்னை ஏமாற்றி விட்டதாக பேட்டி அளித்தார்.
பின்னர் திடீரென தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். கடந்த 2023ல் இலியான வெளியிட்ட இந்த அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஏனென்றால் திருமணத்திற்கு முன்பு இவர் கர்ப்பமானதால் இவருடைய கணவர் யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இழந்தது. ஆனால் தன்னுடைய கணவரை அறிமுகப்படுத்தாமல் இருந்து வந்த இலியானாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகுதான் மைக்கேல் டோலன் என்பவர்தான் தன்னுடைய காதல் கணவர் என அறிவித்தார். இந்நிலையில் தான் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார் இலியானா. இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.