‘விவரிக்க வார்த்தைகள் இல்லை’ – மகன் பெயரை அறிவித்து புகைப்படத்தை வெளியிட்ட ‘இலியானா’.

photo

இருக்கானா இருப்பிருக்கானா’ என ‘நண்பன்’ படத்தில் பெல்லி  நடனமாடி ரசிகர்கள் மத்தியில் நன்கு பரிச்சயமானவர் நடிகை இலியானா. அதற்கு முன்னர் தமிழில் ‘கேடி’ படத்தில் நடித்தார். மொத்தமாகவே கோலிவுட்டில் இரண்டு படங்கள் மட்டுமே நடித்துள்ளார். அதன் பிறகு தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் நடிகை இலியானா திருமணத்திற்கு முன்னரே தான் கர்பமாக இருப்பதை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ந்து பேபி பம்ப் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் இம்மாத துவக்கத்தில் அழகிய ஆண் குழந்தை ஒன்றும் இவருக்கு பிறந்தது. தொடர்ந்து ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துகளை பகிர்ந்து வந்த நிலையில் தற்போது இலியானா குழந்தையின் பெயரை அறிவித்துள்ளார்.

 

அதாவது இலியானாவின் குழந்தை பெயர் “Koa Phoenix Dolan” என்பதாகும். அதனுடன் அவரது குழந்தை தூங்குவது போல் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவேன்றால் இதுவரை அவர் தனது காதலர் யார் என்பதை ரசிகர்களுக்கு அறிவிக்கவில்லை. என்றாலும் கூட லண்டனை சேர்ந்த மாடல் ஒருவர்தான் இலியானாவின் காதலர் என்று சில செய்திகள் கசிந்துவருகிறது.

 

Share this story