கருப்பு வெள்ளை அழகில் இந்துஜா.. வைரலாகும் புகைப்படங்கள் !

indhuja

 கருப்பு வெள்ளையில் இருக்கும் புகைப்படங்களை நடிகை இந்துஜா வெளியிட்டுள்ளார். 

indhuja

கடந்த 2017ஆம் ஆண்டு வைபவ் நடிப்பில் வெளியான ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருக்கும் இவர், ’60 வயது மாநிறம்’,’மெர்குரி’, ‘பில்லா பாண்டி’,  ‘மகாமுனி’, ‘சூப்பர் டூப்பர்’,  ‘பூமராங்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

indhuja

இதையடுத்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் வேம்பு கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். அதன்பிறகு நயன்தாரா நடிப்பில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து விஜய் ஆண்டனியின் ‘காக்கி’, தனுஷின் ‘நானே வருவேன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

indhuja

தற்போது அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வரும் இந்துஜா, தொடர்ந்து போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அழகோவியம் தீட்டிய அழகுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

indhuja

Share this story