பாவாடை தாவணியில் மல்லிகைப்பூ சூடி மயக்கும் ‘மேயாத மான்’ நடிகை..
பாவாடை தாவணியில் இருக்கும் நடிகை இந்துஜாவின் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை இந்துஜா. கடந்த 2017ஆம் ஆண்டு வைபவ் நடிப்பில் வெளியான ‘மேயாத மான்’ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலே ரசிகர்களின் கவனம் ஈர்த்த அவர், ’60 வயது மாநிறம்’,’மெர்குரி’, ‘பில்லா பாண்டி’, ‘மகாமுனி’, ‘சூப்பர் டூப்பர்’, ‘பூமராங்’ உள்ளிட்ட சில படங்களில் கதநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படங்களை தொடர்ந்து ‘பிகில்’ படத்தில் சிங்கப்பெண்ணாக வேம்பு கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார். நயன்தாரா நடிப்பில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள விஜய் ஆண்டனி நடிக்கும் ‘காக்கி’ படத்தில் நடித்துள்ளார். தற்போது தனுஷுடன் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த இந்துஜா, தற்போது கவர்ச்சி களத்திலும் குதித்துள்ளார். தான் கவர்ச்சி கடலில் குதித்துவிட்டேன் என்பதை நிரூபிக்கும் வகையில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் பாவாடை தாவணியில் ஹோம்லி லுக்கில் இருக்கும் புகைப்படங்களை இந்துஜா வெளியிட்டுள்ளார். கவர்ச்சியிலிருந்து மீண்டும் ஹோம்லி லுக்கில் மாறியுள்ள இந்துஜாவின் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


