ஹோம்லி லுக்கில் ஜனனி.. வைரலாகும் புகைப்படங்கள் !

janani

புடவையில் அசத்தல் லுக்கில் நடிகை ஜனனியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

janani

தமிழ் திரையுலகில் ‘திரு திரு துரு துரு’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஜனனி. இந்தப் படத்தை அடுத்து பாலா இயக்கத்தில் வெளியான ‘அவன் இவன்’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். பின்னர் தெகிடி, அதே கண்கள், தர்மப்பிரபு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

janani

பிரபுதேவாவுடன் பஹிரா, பரத்துடன் முன்னறிவான், வேழம் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையே விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சில சினிமா வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது.  

janani

இந்நிலையில் புடவையில் ஹோம்லி லுக்கில் இருக்கும் புகைப்படங்களை நடிகை ஜனனி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

janani

Share this story