கோலிவுட்டில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை ‘ஜான்வி கபூர்’ – அதுவும் யாருக்கு ஜோடியாக தெரியுமா?

photo

பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளரான போனிகபூர் மற்றும் பிரபல நடிகை ஸ்ரீ தேவியின் மகள், ஜான்வி கபூர் பாலிவுட் படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார். தொடர்ந்து சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர் மாலத்தீவிற்கு அடிக்கடி சென்று பிக்கினி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் கோலிவுட்டின் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

அதன்படி கார்த்தி, தமன்னா நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘பையா’, இந்த படத்தை இயக்குநர் லிங்குசாமி இயக்கியிருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தின் இரண்டாம பாகம் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து அதே இயக்குநரால் இயக்கப்பட உள்ளதாகவும், அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் தகவல் வெளியானது.

photo

பையா இரண்டாம் பாகத்தில் ஆர்யா, நாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில். அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன் பல நேட்காணல்களின் மூலமாக  தனக்கு கோலிவுட்டில் நடிக்க ஆர்வம் உள்ளது என்பதை கூறிவந்த ஜான்வி படத்திற்கு ஓகே சொல்லிவிடுவார் என சினிமாவட்டாரம் கூறிகிறது. இந்த படத்தை பான் இந்தியா படமாக எடுக்க இயக்குநர் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

photo

Share this story