பிரபல நடிகையும், தயாரிப்பாளருமான ‘ஜெயதேவி’ காலமானார்.

photo

கோலிவுட்டில் நடிகையாக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் வலம்வந்த ஜெயதேவி, உடல்நல குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 65.

photo

இளம் வயதில் சினிமாவுக்குள் நுழைந்த ஜெயதேவி, இதயமலர், சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  அதுமட்டுமல்லாமல், நலம் நலமறிய ஆவல், விலாங்கு மீன், பாசம் ஒரு வேஷம், விலங்கு உள்ளிட்ட படங்களை இயக்கி, சில படங்களை தயாரித்தும் உள்ளார். குறிப்பாக பிரபல ஒளிப்பதிவாளரான பி.சி ஸ்ரீராம் மற்றும் வேலு பிரபாகரன் இருவரையும் சினிமாவுக்குள் அறிமுகப்படுத்தியது இவர்தான்.

photo

ஜெயதேவி, பிரபாகரனையே திருமணம் செய்து சில பல காரணங்களால் பிரிந்து விட்டார். தொடர்ந்து தனியாக வசித்து வந்த இவர் இதய பிரச்சனை காரணமாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தூக்கத்திலேயே  இறந்துள்ளார். அவரது உடல் அஞ்சலிக்காக போரூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து திரைத்துரையை சார்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share this story