‘பையா 2’-ல் ஸ்ரீதேவியின் மகள் நடிக்கிறாரா ? - போனி கபூர் விளக்கம் !

jhanvi kapoor

‘பையா 2’-ல் நடிகை ஜான்வி நடிப்பதாக வந்த தகவலுக்கு அவரது தந்தை போனி கபூர் விளக்கம் அளித்துள்ளார். 

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ஜான்வி.  இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி, ‘துணிவு’ தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மகளாவார். தற்போது இந்தியில் மட்டும் பிசியாக நடித்து வருகிறார். அதேபோன்று தமிழில் நயன்தாரா நடிப்பில் சூப்பர் ஹிட்டடித்த ‘கோலமாவு கோகிலா’ படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து பிரபலமானார்.

jhanvi kapoor

இதைத்தொடர்ந்து புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அதேநேரம் தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் தனது விருப்பத்தை அண்மையில் தெரிவித்திருந்தார். அப்படி நடித்தால் விஜய் சேதுபதியுடன் நடிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதற்கிடையே லிங்கசாமி இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘பையா 2’ படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக ஜான்வி நடிப்பதாக தகவல் வெளியானது. இதன் மூலம் தமிழில் முதல்முறையாக அறிமுகமாகிறார் என்று கூறப்பட்டது. 

jhanvi kapoor

இந்நிலையில் தனது மகள் ஜான்வி கபூர் எந்த தமிழ் படத்திலும் கமிட்டாகவில்லை என இயக்குனர் போனி கபூர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், எனது மகள் ஜான்வி கபூர் எந்த தமிழ் படத்திலும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. தவறான செய்தியை பரப்பவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.  

Share this story