விஜய் ஆண்டனியின் Lawyer படத்தில் இணைந்த பிரபல நடிகை...!

lawyer

நடிகர் விஜய் ஆண்டனி - ஜென்டில்வுமன் இயக்குநர் கூட்டணியில் உருவாகும் "லாயர்" படத்தில் நடிகை ரவீனா டாண்டன் இணைந்துள்ளார்.  

விஜய் ஆண்டனி நடிப்பில் இறுதியாக வெளிவந்த ரோமியோ, மழைபிடிக்காத மனிதன், ஹிட்லர் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால், வெற்றிப்படத்தைக் கொடுக்கும் கட்டாயத்தில் விஜய் ஆண்டனி இருக்கிறார். விரைவில் இவர் நடித்த சக்தித் திருமகன் திரைப்படம் திரைக்கு வருகிறது.இந்நிலையில், அடுத்ததாக, அண்மையில் வெளியாகி விமர்சகர்களிடம் பாராட்டுகளைப் பெற்ற 'ஜென்டில்வுமன்' படத்தின் இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. அப்படத்தின் தலைப்பு தற்போது வெளியாகி உள்ளது. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு "லாயர்" எனப் பெயரிட்டுள்ளனர். நீதிமன்ற பின்னணியில் ஒரு வித்தியாசமான வழக்கை மையமாக வைத்து, இப்படத்தின் கதையை உருவாக உள்ளது. படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.


படத்தின் டைட்டிலை கடந்த வாரம் வெளியிட்ட நிலையில் தற்பொழுது படத்தில் இந்தி நடிகையான ரவீனா டாண்டன் இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர்
வெளியிட்டு அறிவித்துள்ளனர். ரவீனா டாண்டன் கடைசியாக கே.ஜி.ஃப் பாகம் 1 மற்றும் 2 திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு பணிகள் வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது. படத்தை பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 

Share this story