கிப்லி ட்ரெண்டில் இணைந்த நடிகை ஜோதிகா... வைரலாகும் புகைப்படங்கள்...!

தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டில் இருந்து வரும் கிப்லி ட்ரெண்டில் நடிகை ஜோதிகாவும் இணைந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா, திருமணத்திற்குப் பிறகு நடிப்பை குறைத்துக் கொண்டாலும், சமீப காலமாக சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ள ஜோதிகாவுக்கு 4 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில், கடந்த ஆண்டு இதே நாளில் நேபாளத்தில் உள்ள இமயமலையில் தனது தோழியுடன் டிரெக்கிங் செய்த புகைப்படங்களை பதிவு செய்திருந்த நிலையில், தற்போது அந்த புகைப்படங்களை ட்ரெண்டிங்கில் உள்ள Ghibli படங்களாக மாற்றி பதிவு செய்துள்ளார். இந்த Ghibli புகைப்படங்களுக்கு ஆயிரக்கணக்கான லைக்குகள் கிடைத்துவரும் நிகழ்வு, ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.