சினிமாவில் இருந்து விலகுகிறேனா ?... வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் !

kajal Agarwal

சினிமாவை விட்டு விலகுவதாக வந்த தகவலுக்கு தனது புதிய படத்தின் அறிவிப்பால் நடிகை காஜல் அகர்வால் பதிலளித்துள்ளார்.  

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.‌ தமிழில் ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். அதேநேரம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொழிலதிபர் கெளதம் கிச்சிலுவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.‌

kajal Agarwal

இதையடுத்து காஜல் அகர்வாலுக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இதனால் குழந்தை பராமரிப்பிலும், சினிமாவிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் இரண்டிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்த முடியாததால் சினிமாவை விட்டு நடிகை காஜல் அகர்வால் விலகுவதாக சமீபகாலமாக தகவல் வெளியாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.‌

kajal Agarwal

ஆனால் சினிமாவை விட்டு விலகுவதாக வந்த தகவலை முற்றிலும் நடிகை காஜல் அகர்வால் மறுத்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், சினிமாவில் இருந்து ஒருபோதும் நான் விலக மாட்டேன்.  ரசிகர்கள் மீது மிகுந்த அன்பு உள்ளது. அதனால் எளிதில் சினிமாவை விட மாட்டேன். எனது சினிமா வாழ்க்கையும் குடும்ப வாழ்க்கையும் தனித்தனியாக உள்ளது. அதனால் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார்.  ‌ 

‌ இதற்கிடையே நடிகை காஜல் அகர்வால் படத்தின் தலைப்பு இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது. 

Share this story