கட்டுகடங்காத கவர்ச்சி.. எல்லை மீறும் காஜல் அகர்வால் !

நடிகை காஜல் அகர்வால் உச்சபட்ச கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். அதேநேரம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொழிலதிபர் கெளதம் கிச்சிலுவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
இதையடுத்து காஜல் அகர்வாலுக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இதனால் குழந்தை பராமரிப்பிலும், சினிமாவிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் இரண்டிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்த முடியாததால் சினிமாவை விட்டு நடிகை காஜல் அகர்வால் விலகுவதாக சமீபகாலமாக தகவல் வெளியாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால் சினிமாவை விட்டு விலகுவதாக வந்த தகவலை முற்றிலும் நடிகை காஜல் அகர்வால் மறுத்துள்ளார். தற்போது அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்நிலையில் உச்சக்கட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.