இருளில் தெரியும் ஒளி போல மாறிய காஜல் அகர்வால்...
நடிகை காஜல் அகர்வாலின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு என பலமொழிகளில் நடித்து வருபவர் காஜல் அகர்வால். தொடர்ந்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த காஜல், இரண்டு ஆண்டுகளுக்கு தொழிலதிபர் கெளதம் கிச்சுலுவை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு நீல் என்று பெயர் வைத்துள்ளனர். அதோடு தனது குழந்தையின் புகைப்படங்களை அவ்வெவ்போது வெளியிட்டு வருகிறார். இதற்கிடையே தமிழில் கமலின் ‘இந்தியன் 2’ உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது அழகான புகைப்படங்களை நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.