என் மகனுக்கு ‘துப்பாக்கி’ படம் தான் காட்டுவேன் - நடிகை காஜல் அகர்வால் !

kajal agarwal

தனது மகன் குறித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார். 

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ள அவர், தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வரும் அவர், தற்போது கமலின் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். 

kajal agarwal

இதற்கிடையே கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு தொழிலதிபர் கெளதம் கிச்சுலு என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இதையடுத்து கர்ப்பமான காஜல் அகர்வால், இரண்டு ஆண்டுகள் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு ‘நீல் கிச்சுலு’ என்று பெயர் வைத்துள்ளார். 

kajal agarwal

 சமீபத்தில் தனது குழந்தை புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த காஜல் அகர்வால், தனது மகனுக்கு எட்டு வயதாகும் வரை படங்கள் பார்ப்பதையே அல்லது ஸ்மார்ட் சாதனங்களை பயன்படுத்துவதை நான் அனுமதிக்கப் போவதில்லை. எனது மகனுக்கு 8 வயதாகும் போதுதான் படங்களை பார்க்க அனுமதிப்பேன். என் மகனுக்கு நான் காண்பிக்கும் முதல் படம் ‘துப்பாக்கி’ தான் என்று கூறியுள்ளார். 

கடந்த 2012-ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘துப்பாக்கி’. இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் காஜலின் வாழ்க்கையில் முக்கியமான படமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story