உன் அம்மாவாக இருப்பது சவாலானது - தனது குழந்தை குறித்து காஜல் அகர்வால் நெகிழ்ச்சி !
உன் அம்மாவாக இருப்பது சவாலானது என நடிகை காஜல் அகர்வால் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தென்னிந்தியாவில் பிரபல நடிகர் இருப்பவர் காஜல் அகர்வால். பல மொழிகளில் நடித்து வரும் அவர், தற்போது கமலுடன் இணைந்து 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொழிலதிபர் கௌதம் கிச்சிலுவை திருமணம் செய்து கொண்டார். தற்போது ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ள நடிகை காஜல் அகர்வால் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் என் வாழ்க்கையில் ஆழமான மாற்றங்கள் ஏற்பட்ட இந்த ஆறு மாதங்கள் எவ்வாறு சென்றது என்பது தெரியவே இல்லை. பயந்து பெண்ணாக இருந்த நான் அம்மாவாகி பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். நான் என்னுடைய வேலைகளை கவனித்து வந்தாலும், ஒரு அம்மாவாக உணவு, கவனிப்பு, அன்பு ஆகியவற்றை கொடுப்பது சவாலானதாக தான் இருக்கிறது.
நீ செய்யும் சேட்டைகள் அனைத்தும் ஒரே இரவில் நடந்ததை போல இருக்கிறது. உனக்கு வந்த முதல் ஜலதோஷம், நெற்றியில் வந்த முதல் கட்டி, கடலில் குளித்தது, உணவுகளை ருசிக்க ஆரம்பித்தது என எல்லாமே வேகமாக நடந்துவிட்டது. இப்படியே சென்றால் நீ அடுத்த வாரமே கல்லூரிக்கு கூட போய் விடுவாய் என நானும் உன் அப்பாவும் பேசி சிரித்துக் கொண்டிருக்கிறோம். நீ எங்களை பொறுப்பான பெற்றோராக மாற்றியுள்ளாய். எங்களை உன் மூலம் கடவுள் ஆசிர்வதித்துள்ளார். உன் அம்மாவாக இருப்பது மிகவும் சவாலானது. மதிப்புமிக்கது. நீ பிறந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. வாழ்த்துக்கள் என்னுடைய நீல் என்று குறிப்பிட்டுள்ளார்.