குறையாத காதல்... கணவருடன் அசத்தலான லுக்கில் காஜல் அகர்வால்.. ரீசென்ட் க்ளிக்ஸ் !

kajal agarwal

தனது கணவருடன் இருக்கும் அசத்தலான புகைப்படங்களை நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார். 

kajal agarwal

மும்பை சேர்ந்த நடிகை காஜல் அகர்வால், கடந்த 2008-ஆம் ஆண்டு நடிகர் பரத் நடிப்பில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு தனது அழகான நடிப்பால் தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக மாறிய அவர், விஜய், அஜித், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். 

kajal agarwal

தமிழ் தவிர தெலுங்கு, இந்தி என மூன்று மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தென்னிந்தியாவில் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்துள்ள அவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொழிலதிபர் கெளதம் கிச்சுலுவை காதலித்து  திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு நீல் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.

kajal agarwal

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அந்த வகையில் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் தனது கணவருடன் க்யூட் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார். அசத்தலான இருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது. 

 

Share this story