நடிகை கமலா காமேஷ் இறந்ததாக வதந்தி... மகள் உமா ரியாஸ் விளக்கம்

kamala kamesh

சம்சாரம் அது மின்சாரம் படத்தில் நடிப்பில் கலக்கிய நடிகை கமலா காமேஷ் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார் என்ற செய்தி வதந்தி என்று அவருடைய மகள் உமா ரியாஸ் கான் மறுப்பு தெரிவித்துள்ளார். கமலா காமேஷ் உடல்நல பாதிப்பால் உயிரிழந்துவிட்டதாக கடந்த ஒரு மணி நேரமாக தகவல்கள் வெளியான நிலையில் அது வதந்தி என உமா ரியாஸ் மறுத்துள்ளார். இதுகுறித்து உமா ரியாஸ் கூறுகையில்,  எனது அம்மா நலமுடன் இருக்கிறார். எனது மாமியாரும் ரியாஸ் கானின் தாயுமான ரஷீதா பானுதான் உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்டார்.

kamala kamesh

அவர் என்னுடன் சென்னை வீட்டில் இருந்தார். வயோதிகம் காரணமாக மறைந்தார். அவருக்கு வயது 72 என உமா ரியாஸ் தெரிவித்துள்ளார். தமிழ், மலையாளம், கன்னட மொழி திரைப்படங்களில் அம்மா கேரக்டர், குணச்சித்திர கேரக்டர்களில் 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருப்பவர் கமலா காமேஷ். இவர் சம்சாரம் அது மின்சாரம், கடலோர கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

kamala

இவர் கடந்த 1974 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் காமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உமா ரியாஸ் என்ற மகள் இருக்கிறார். இவர் நடிகர் ரியாஸ் கானின் மனைவியாவார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

Share this story