‘சந்திரமுகி 2’-ஐ முடித்த நடிகை கங்கனா.. லாரன்ஸ் மாஸ்டருடன் பணியாற்றியது குறித்து மகிழ்ச்சி !

Chandramukhi 2

‘சந்திரமுகி’ படத்தின் படப்பிடிப்பை இன்றுடன்  நிறைவு செய்துள்ளதாக நடிகை கங்கனா தெரிவித்துள்ளார். 

நடிகர் ரஜினியின் நடிப்பில் உருவான சூப்பர் ஹிட் படமான ‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகம் 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உருவாகி வருகிறது. ரஜினியின கதாபாத்திரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், அவரை போன்று தோற்றத்திலேயே நடித்து வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை முன்னணி இயக்குனர் பி வாசு இயக்கி வருகிறார். 

Chandramukhi 2

இந்த படத்தில் சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா நடித்து வருகிறார். இவர்களுடன் வடிவேலு, ராதிகா, மகிமா நம்பியார், லஷ்மி மேனன், ஸ்ருதி டாங்கே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையில் உருவாகும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். தோட்டாதரணி கலை இயக்குனராக பணியாற்றி வருகிறார். 

Chandramukhi 2

இந்த படத்தில் சந்திரமுகி மற்றும் வேட்டையன் இடையேயான மோதலை தான் படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர்.  தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த படத்தில் தனது பகுதி காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதாக கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

Chandramukhi 2

அதில் நான் ‘சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பை இன்றுடன் நிறைவு செய்துவிட்டேன். நான் சந்தித்த அற்புதமான மனிதர்களில் இருந்து விடைபெறுவது கடினமாக உள்ளது. ராகவா லாரன்ஸ் சார் எப்போது என்னை வியப்படையும் மனிதராக உள்ளார். நடன இயக்குனராக இருந்து பல ப்ளாக்பஸ்டர் படங்களை கொடுத்து இன்று மிகப்பெரிய நடிகராக உயர்ந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

Share this story