“சின்ன பட்ஜெட் படங்களுக்கு வரியை நீக்குக!” - ‘வானரன்' பட விழாவில் நடிகை கஸ்தூரி பேச்சு

தமிழ் சினிமாவில் ஒரு நோய் அதிகரிக்கின்றது.. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்துகிறார்கள் என நடிகை கஸ்தூரி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற 'வானரன்' திரைப்படத்தின் நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசியதாவது, "வாரிசு என்பது எல்லா இடத்திலும் கண்டிக்க கூடிய விஷயம் கிடையாது. சில இடங்களில் அது வரவேற்க வேண்டிய விஷயம். அப்படி விஜய் நாகேஷை வருக வருக என்று வரவேற்கிறோம். தமிழ் சினிமாவில் ஒரு நோய் அதிகரிக்கின்றது.. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்துகிறார்கள்.
சனாதனத்தையும், சாதியையும் இழிவுபடுத்தும் படங்கள்தான் படங்கள்தான் பெரிய முற்போக்கு என்கிற ஒரு சிந்தனையை இயக்குநர்களிடம் நம் பார்க்கிறோம். அப்படி வருகிற படங்களை மக்கள் நிராகரிக்கின்றனர். இப்படிப்பட்ட படங்கள், ட்ரைலர்கள் மத நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் விதமாக இருக்கிறது. வெளிநாடுகளில் பெரிய ஹீரோ படங்களுக்கு ஒரு டிக்கெட் விலை, சாதராண படங்களுக்கு இன்னொரு விலை, தமிழகத்திலும் அதனை கடைபிடிக்க வேண்டும். சின்ன பட்ஜெட் படங்களுக்கான கேளிக்கை வரியை அரசு நீக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.