கண்ணகியாக அசத்தப் போகும் கீர்த்தி பாண்டியன்... புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!

keerthi-pandian-34

நடிகை கீர்த்தி பாண்டியன் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

முன்னாள் நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் தமிழில் 'தும்பா' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்தப் படத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதையடுத்து மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'ஹெலன்' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான 'அன்பிற்கினியாள்' படத்தில் நடித்தார். அதில் அவரது அப்பா அருண் பாண்டியனும் நடித்திருந்தார். கீர்த்தி பாண்டியன் அந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

kannagi

இந்நிலையில் கீர்த்தி பாண்டியன் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்தப் படத்திற்கு 'கண்ணகி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஷாலினி என்பவர் அந்தப் படத்தை இயக்கவுள்ளார்.  போஸ்டரில் கீர்த்தி பாண்டியன் கர்ப்பிணிப் பெண்ணாக காணப்படுகிறார். மேலும் வயிற்றிலிருந்து ஒரு கயிறு நீண்டு அதை ஒருவர் பற்ற வைப்பது போலவும் போஸ்டர் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில்  அம்மு அபிராமி, வித்யா பிரதீப் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஷான் ரஹ்மான் என்பவர் இசையமைக்கிறார். தனுஷ் மற்றும் ஜெ தனுஷ் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படம் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

Share this story