சினிமாவில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த கீர்த்தி சுரேஷ்

தென்னிந்தியாவில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கென்று தனி கூட்டமே உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். தன்னுடைய க்யூட் நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். தெலுங்கு நடிகர் நனியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்த 'தசரா' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
அவரது நடிப்பில் தமிழில் அண்மையில் வெளியான திரைப்படம் மாமன்னன். உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக இப்படத்தில் அவர் நடித்திருப்பார். அவரது நடிப்பில் ரகு தாத்தா படத்தின் படப்பிடிப்பு நிறைவு அடைந்துள்ளது. இதையடுத்து, இந்தியிலும் அவர் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
nullWith love and Gratitude ❤️🙏🏻#10years pic.twitter.com/7oXslvuh8I
— Keerthy Suresh (@KeerthyOfficial) November 14, 2023
இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவிற்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளன. இதனை விமரிசையாக கொண்டாடி வரும் கீர்த்தி சுரேஷ், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ பகிர்ந்துள்ளார்.