அழகோவியமாய் மாறிய கீர்த்தி ஷெட்டி.. க்யூட் புகைப்படங்கள் இதோ

keerthy shetty

 நடிகை கீர்த்தி ஷெட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வரவேற்பை பெற்றுள்ளது. 

keerthy shetty

‘உப்பென்னா’ படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. தெலுங்கில் இளம் நடிகையாக இருக்கும் இவர், முதல் படத்திலே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். இந்த படத்தையடுத்து லிங்குசாமியின் ‘தி வாரியர்’ படத்தில் நடித்தார். இந்த படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 

keerthy shetty

இந்த படத்தையடுத்து பாலா - சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் ‘வணங்கான்’ படத்தில் கதாநாயகியாக நடித்து வந்தார்.  இந்த படத்தின் மூலம் தமிழில் முதல்முறையாக அறிமுகமாகவுள்ளார். இந்த படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் நடித்து வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

keerthy shetty

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், தொடர்ந்து போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இளமை ததும்ப ததும்ப அழகிய லுக்கில் இருக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.  

keerthy shetty

keerthy shetty

Share this story