'வணங்கான்'-ல் இருந்து வெளியேறியது ஏன் ?... ஓபனாக பேசிய நடிகை கீர்த்தி ஷெட்டி !

krithi shetty

'வணங்கான்' படத்திலிருந்து வெளியேறியது குறித்து முதல் முறையாக நடிகை கீர்த்தி ஷெட்டி மனம் திறந்துள்ளார். 

தெலுங்கில் 'உப்பென்னா' படத்தின் மூலம் பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ். அதன்பிறகு லிங்குசாமியின் தெலுங்கு படமான 'தி வாரியர்' படத்தில் நடித்தார். இதையடுத்து அவருக்கு தெலுங்கில் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது நாகசைதன்யா நடிப்பில் உருவாகும் 'கஸ்டடி' படத்தில் நடித்து முடித்துள்ளார். 

 krithi shetty

இதையொட்டி இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய நடிகை கீர்த்தி ஷெட்டியிடம் 'வணங்கான்' படத்தில் இருந்து வெளியேறியது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், வணங்கான் படத்தின் தயாரிப்பு பணிகள் நீண்டுக் கொண்டே சென்றதால் தான் விலகினேன். மற்றப்படி வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினார்.  

பாலாவின் இயக்கத்தில சூர்யாவின் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் 'வணங்கான்'. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது பாலாவிற்கும், சூர்யாவிற்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சூர்யா வெளியேறிவிட்டார். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் சூர்யா வெளியேறியவுடன் கீர்த்தி ஷெட்டியும் வெளியேறிவிட்டார்.  இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருந்தார். அது நடக்காததால் ஜெயம் ரவி படத்தின் மூலம் விரைவில் தமிழில் அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story