கேரள பெண்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பிரதிநிதியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்

கேரள பெண்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பிரதிநிதியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்

கேரள பெண்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பிரதிநிதியாக நடிகை கீர்த்தி சுரேஷை, கேரள கிரிக்கெட் சங்கம் நியமித்துள்ளது.

கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமா படங்களில் நடித்திருந்தாலும், கடந்த 2018ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான  கீதாஞ்சலி படத்தின் மூலமாக கதாநாயகியாக நடித்து தனது திரைவாழ்வை துவங்கினார். தொடர்ந்து தமிழ் சினிமா பக்கம் திரும்பிய அவர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ‘இது என்ன மாயம்’ படத்தில் நடித்தார். அடுத்து அவர் நடித்த ‘ரஜினி முருகன்’ கீர்த்திக்கு தனி அடையாளத்தை பெற்று தந்தது. தொடர்ந்து தொடரி, ரெமோ, பைரவா, தானா சேந்த கூட்டம், சாமி2, சர்கார் என அவரது வாழ்கையில் ஏறுமுகம்தான்.

கேரள பெண்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பிரதிநிதியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்

அவரது நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் மாமன்னன். உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக இப்படத்தில் அவர் நடித்திருப்பார். அவரது நடிப்பில் ரகு தாத்தா படத்தின் படப்பிடிப்பு நிறைவு அடைந்துள்ளது.

கேரள பெண்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பிரதிநிதியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்

இந்நிலையில், கேரள பெண்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பிரதிநிதியாக நடிகை கீர்த்தி சுரேஷை, கேரள கிரிக்கெட் சங்கம் நியமித்துள்ளது. ஜெர்சியை அணிந்துகொண்டு கீர்த்தி சுரேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. 

Share this story