“உன் மேல ஒரு கண்ணு.. நீதான் என் கேர்ள் பிரெண்ட்டு”... இணையத்தை கலக்கும் கீர்த்தி சுரேஷ் !

keerthi

கருப்பு நிற உடையில் கலக்கும் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

தனது அழகான நடிப்பால் எளிதில் கவர்ந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருக்கும் அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2013-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘கீதாஞ்சலி’ மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இருப்பினும் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக சில நடித்துள்ளார். 

keerthi

தமிழில் விக்ரம் பிரபுவின் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு சிவகார்த்திகேயனுடன் ‘ரஜினி முருகன்’ படத்தில் நடித்து ரசிகர்களின் கவனம் பெற்றார். பின்னர் தேசிய விருதுபெற்ற ‘நடிகையர் திலகம்’  படத்தில் அசாத்திய திறமையை வெளிப்படுத்தினார். இந்த படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார். 

keerthi

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வரும், அவர், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் உதயநிதியின் ‘மாமன்னன்’, நானியுடன் ‘தசரா’  ஆகிய இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார்.

keerthi

இந்நிலையில் கருப்பு நிற உடையில் இருக்கும் புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார். ப்யூட்டி குயினாக இருக்கும் அந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

Share this story