வெறித்தனமான உடற்பயிற்சி... வைரலாகும் கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் !

keerthy suresh

 நடிகை கீர்த்தி சுரேஷ் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

keerthy suresh

தென்னிந்திய சினிமாவின் க்யூட் நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். மலையாள நடிகையான அவர், தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு அவர் வெளியான நடிகர் திலகம் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. 

keerthy suresh

தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர தமிழில் உதயநிதியின் ‘மாமன்னன்’ படத்தில் கதாநாயகியாகவும், நானியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘தசரா’ படத்திலும் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாகவுள்ளது. 

keerthy suresh

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தீவிரமான உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதில் தனது உடலை கட்டுக்கோப்பாக வகைக்க பல வகையில் உடற்பயிற்சிகளை நடிகை கீர்த்தி சுரேஷ் செய்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

 keerthy suresh

Share this story