நீண்ட நாள் நண்பருடன் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு விரைவில் டும்..டும்..டும்.. ?

keerthi suresh

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட கால நண்பரை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நண்பரை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், தமிழில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ‘இது என்ன மாயம்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்னர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினிமுருகன், ரெமோ ஆகிய படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இதனைத்தொடர்ந்து விஜய்யுடன் பைரவா, சர்கார் ஆகிய படங்களில் நடித்தார். மேலும் சண்டக்கோழி 2, அண்ணாத்த, மாமன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் அக்னியாதவாசி, நேனு லோக்கல் ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.keerthi suresh

இதனிடையே நாக் அஷ்வின் இயக்கத்தில் சாவித்ரி வாழ்க்கை வரலாறு ‘நடிகையர் திலகம்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக நடித்து பாராட்டை பெற்றார். இப்படத்திற்காக கீர்த்தி சுரேஷ் தேசிய விருது வென்றார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ’ரகு தாத்தா’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இந்தியில் ’பேபி ஜான்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.


இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் அவரது 15 வருட நண்பரான ஆண்டனி  தட்டில்க்கும் கோவாவில் வரும் டிசம்பர் 11ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் பள்ளி காலம் முதல் நண்பர்கள் எனவும், ஆண்டனி துபாயை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்த கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

Share this story