கிளாமரை ஏற்றிக் கொண்டே இருக்கும் கீர்த்தி சுரேஷ் .. க்யூட் லுக் புகைப்படங்கள் !
உச்சக்கட்ட கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார்.
தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தன்னுடைய க்யூட் நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் உதயநிதியுடன் ‘மாமன்னன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அதேபோன்று சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் உருவாகி வெளியான ‘தசரா’ படத்தில் கதாநாயகியாக நடித்தார்.இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதுதவிர தமிழில் ரகு தாத்தா, சைரன், ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார். கிளாமர் லுக்கில் இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.