பல மொழிகளில் குவியும் வாய்ப்புகள்.. சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய கீர்த்தி சுரேஷ் !

keerthy suresh

நடிகை கீர்த்தி சுரேஷூக்கு பல மொழிகளில் வாய்ப்புகள் குவிந்து வருவதால் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளார். 

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தன்னுடைய க்யூட் நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் உதயநிதியுடன் அவர் நடித்த ‘மாமன்னன்’ திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.  

keerthy suresh

அதேபோன்று சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் வெளியான ‘தசரா’ படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். தற்போது தமிழில் ரகு தாத்தா, சைரன், ரிவால்வர் ரீட்டா, கண்ணி வெடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர ‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக்கிலும் அவர் நடிக்கவுள்ளார். 

இந்நிலையில் பல மொழிகளில் வாய்ப்புகள் குவிந்து வருவதால் தனது சம்பளத்தை அதிரடியாக கீர்த்தி சுரேஷ் உயர்த்தியுள்ளார். இதுவரை 2 கோடி சம்பளம் வாங்கி வந்த அவர், 3 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story