தொழிலதிபரை கரம்பிடிக்கும் கீர்த்தி சுரேஷ்.... வைரலாகும்‌ இன்ஸ்டா பதிவு !

Keerthi suresh

பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் துபாய் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் 'மாமன்னன்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.‌ அதேபோன்று தற்போது 'ரிவால்டர் ரீட்டா' என்ற‌ படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Keerthi suresh

இதற்கிடையே தொழிலதிபர் ஒருவரை நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் தனது வருங்கால கணவரை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Keerthi suresh

நடிகை கீர்த்தி சுரேஷின் நீண்ட கால நண்பராக இருப்பவர் ஃபர்ஹாத் பின் லியாகத். துபாயில் பிரபல தொழிலதிபராக இருக்கும் அவரை நடிகை கீர்த்தி சுரேஷ் சில ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் அவரை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கீர்த்தி சுரேஷ் தரப்பில் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story