நடிகை குஷ்பூவிற்கு என்னாச்சு ?.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அதிர்ச்சி !

kushboo

நடிகை குஷ்பூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல நடிகையாகவும், அரசியல் பிரமுகராகவும் இருப்பவர் நடிகை குஷ்பூ. 90-களில் புகழ்பெற்ற  நடிகையாக வலம் வந்த அவர், இன்றைக்கு ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்துள்ளார். பன்முக திறமைக் கொண்ட அவர், நடிகை, தயாரிப்பாளர், சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல்வேறு ஜானரில் பணியாற்றி வருகிறார். 

kushboo

தற்போது சினிமாவில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதோடு சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார். இதுதவிர பாரதிய ஜனதா கட்சியில் முழு நேர அரசியல்வாதியாக இருந்து வருகிறார். அந்த வகையில் மகளிர் ஆணைய உறுப்பினர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. 

kushboo

இந்நிலையில் நடிகை குஷ்பூ தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் கையில் ட்ரிப்சுடன் பெட்டில் படுத்திருக்கிறார். இதை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து குஷ்பூவுக்கு என்னாச்சு என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்து குஷ்பூவே விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளார். அதில் முதுகு பகுதியில் இருக்கக்கூடிய வால் எழும்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், முழுமையாக நலமுடன் திரும்ப பிராத்தியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

Share this story