திரைத்துறையில் 45 ஆண்டுகளை கடந்த நடிகை குஷ்பு...!
1735474550000
தமிழில் 'வருஷம் 16' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் குஷ்பு. பாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் தமிழில் 'வருஷம் 16 திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் குஷ்பு. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக குஷ்பு நடித்திருக்கிறார்.
இயக்குனர் சுந்தர் சி., யை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், இன்றுடன் திரைத்துறையில் குஷ்பு காலடி எடுத்து வைத்து 45 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இதனையடுத்து நடிகை குஷ்பு வீடியோ வெளியிட்டு தனக்கு உறுதுணையாக இருந்தவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.