சொந்த தந்தையால் 8 வயதில் பாலியல் தொல்லை - பகீர் கிளப்பிய நடிகை குஷ்பூ !

kushboo sundar

 8 வயதில் தனது தந்தையே பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக நடிகை குஷ்பூ பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருக்கும் குஷ்பூ, கடந்த 1988-ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘தர்மத்தின் தலைவன்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு வருஷம் 16, வெற்றிவிழா, சின்னத்தம்பி, நாட்டாமை, அண்ணாமலை உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். இதில் ‘சின்னத்தம்பி’ திரைப்படம் குஷ்பூவின் வாழ்க்கையே மாற்றிய படமாக அமைந்தது. 

தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தள்ளார். தமிழை தவிர தெலுங்கு, இந்தி, மலையாளம் என 4 மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்தள்ளார். சினிமாவில் கொடிக்கட்டி பறந்த வந்த குஷ்பூ, முறைமாமன் படத்தை இயக்கிய சுந்தர்.சியுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்துக்கொண்டார்.  நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் சுந்தர்.சி-குஷ்பூ தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா என இருமகள்கள் உள்ளனர். நடிகையாக இருக்கும் குஷ்பூ தயாரிப்பாளராகவும், சின்னத்திரையில் நடிகையாக வலம் வருகிறார். தற்போது அரசியலில் பா.ஜ.க கட்சியில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். 

சொந்த தந்தையால் 8 வயதில் பாலியல் தொல்லை - பகீர் கிளப்பிய நடிகை குஷ்பூ !

இந்நிலையில் தனது 8 வயதில் தனது தந்தையாலேயே பாலியல் ரீதியான சீண்டல்களால் நடிகை குஷ்பூ உள்ளாகியுள்ளார். மோஜோ ஸ்டோரிக்காக பேசிய அவர், ஒரு குழந்தையை துஷ்பிரயோகம் செய்யப்படும்போது, அது வாழ்நாள் முழுவதும் வடுவாக இருக்கும். தனது மனைவி மற்றும் குழந்தையை அடிப்பதும், தன் ஒரே மகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதும் தன் பிறப்புரிமை என என் அப்பா நினைத்துக் கொண்டிருந்தார்.

8 வயதில் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். 15 வயது வரை அவரை எதிர்க்கும் தைரியம் என்னிடம் இல்லை. இந்த விஷயத்தை வெளியே சொன்னால் என்னுடைய குடும்பம் பாதிக்கப்படும்  என்பதால் இவ்வளவு அமைதியாக இருந்தேன். இதை என்னுடைய அம்மா கூட  நம்பாமல் இருக்கலாம் என்ற பயம் இருந்தது. 15 வயதில் என் அப்பாவை எதிர்க்க தொடங்கினேன். அதனால் அவரை எங்களை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். கடினமான காலக்கட்டத்தில் வாழ்க்கையில் போராடி தான் மீண்டு வந்தோம் என்று குஷ்பூ கூறினார்.  குஷ்பூ கூறிய இந்த பகீர் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

Share this story