க்யூட் லுக்கில் கீர்த்தி ஷெட்டி... லைக்குகளை குவிக்கும் புகைப்படங்கள் !

krithi shetty

க்யூட் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை நடிகை கீர்த்தி ஷெட்டி வெளியிட்டுள்ளார். 

krithi shetty

தெலுங்கில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் கீர்த்தி ஷெட்டி. தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழிலும் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான ‘உப்பென்னா’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

krithi shetty

இதையடுத்து தெலுங்கு முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் வெளியான ‘தி வாரியர்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன்பிறகு வெங்கட் பிரபு மற்றும் நாகசைதன்யா கூட்டணியில் உருவாகி வரும் ‘கஸ்டடி’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

krithi shetty

இதற்கிடையே ​பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக இருந்த ‘வணங்கான்’ படம் டிராப்பானதால் அப்படத்திலிருந்து விலகிவிட்டார். இதைத்தொடர்ந்து தமிழில் ஜெயம் ரவியின் ‘ஜீனி’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுதவிர விஷால் படம் ஒன்றிலும் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

krithi shetty

இந்நிலையில் க்யூட் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை கீர்த்தி ஷெட்டி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

krithi shetty

krithi shetty

krithi shetty

Share this story